விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்!!

-MMH

பூரண மதுவிலக்கு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் மது பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியாக விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி தொகுதி ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிழக்கு ஒன்றிய செயலாளர் உமையணன் வரவேற்பு உரையாற்றினார். மேற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் சிறப்புரையாற்றினார்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி செயலாளர் மாரிசெல்வம் உட்பட சிவபெருமாள்,மாடசாமி, மாரிசெல்வம், காளியம்மாள், சந்தனமாரி,கன்னியம்மாள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments