தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் மோடி மீது ஆ.ராசா கடும் தாக்கு!!


தூத்துக்குடியில் நேற்று மாலை கலைஞரின் நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஆ ராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்.

அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் பேசியது:

"நம்முடைய மாநகராட்சி சார்பில் கடந்த வாரம் இரண்டு பட்டிமன்றம் நடைபெற்றது அடுத்த வாரம் அமைச்சர் பொன்முடி அவர்கள் இங்கே வர இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல் பாஜகவில் ஒரு தலைவர் இருக்கிறார் அவர் வாய்க்கு வந்து படி பேசி வருகிறார். நாம் அப்படியல்ல தளபதி வழியில் மக்களோடு இனைந்து  சேவையாற்றி வருகிறோம். எங்கள் தலைவர் 85% தேர்தல் வாக்குறு நிறைவேற்றி உள்ளார் மோடியின் அரசு அம்பானி  அதானி அவர்கள் அரசாக உள்ளது."

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here....

பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா   அவர்கள் பேசியது:

"கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் இன்று நான் கலந்து கொண்டு பேசுகிறேன். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கிறார் மோடி அடிப்படைச் சட்டத்தை  மாற்றக்கூடாது என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களை எழுதி உள்ளார்கள். 

இந்தியா இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற நாடு, பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக நாட்டின் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பித்தார்கள் அதில் குஜராத்தில் 24 சதவீதம் பேர் உள்ளார்கள் மோடி முதலமைச்சராக இருந்த மாநிலம் அது அங்கு நிலைமை இப்படி உள்ளது.  தமிழ்நாட்டில் வெறும் 11 சதவீதம் மட்டுமே உள்ளது இதுதான் திராவிட மடல்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மணிப்பூரில் நடைபெரும் கலவர சம்பவத்தால் முதலமைச்சர்,கவர்னர்  உள்ளிட்டோர் வீட்டைவிட்டே வெளியே வரமுடியவில்லை மத்திய அமைச்சர் வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரிடமிருந்து 200 துப்பாக்கிகளை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இப்படி கலவரப்பூமியாக இருக்கும் மணிப்பூரைப்பற்றி பேசாமல் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப்பற்றி கவர்னர் பேசி வருகிறார். 

ஊழலைப் பற்றி மத்திய பிரதேசத்தில்  மோடி அவர்கள் பேசுகிறார்கள் கருணாநிதி குடும்பம் ஊழல் செய்கிறது நேரு குடும்பம் ஊழல்  செய்து இந்த நாட்டை கெடுக்கிறது  என்று பேசி இருக்கிறார். மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் எங்கோ இருந்த அதானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதற்கு காரணம் மோடியின் அரசு மற்றும் வெளிநாட்டு பத்திரிகை ஒன்று ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தது அதற்கு நாடாளுமன்றத்தில் 14 நாட்களாக மோடி பதிலை சொல்லவில்லை அதைப்பற்றி பெங்களூரில் ஒரு நபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்கு அவரை கைது செய்தது மோடி அரசு இப்ப இந்த கூட்டத்தில் சொல்கிறேன் அந்த வெளிநாட்டு பத்திரிகை செய்தி உண்மை  மோடி அரசு ஊழல் அரசு முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என பேசினார்.

இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  பி.கீதாஜீவன் Mcom MLA அவர்கள் , மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்  மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் அவர்கள் , ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments