மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியண் பங்கேற்பு!!!.

அரசியலும் ஆன்மீகமும் கலந்த இப்பகுதி மக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 27ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 7வதுநாள் நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சாமி தரிசனம் செய்த பின்னர் நெல்லை பத்மநாதன் தெம்மாங்கு கும்மிபாடல் நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் துவக்கி வைத்து பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் கொடைவிழாவிற்கு தொடர்ந்து வருகிறேன். 

இந்த சண்முகபுரம் பகுதி அதிக அளவில் ஆன்மீகம் நிறைந்த பகுதியாகவும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான குறைபாடுகள் இருக்கும் அதை நிறைவு செய்ய வேண்டுதல் வைக்கும் இடமாக ஆலயங்கள் விளங்குகின்றன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த அடிப்படையில் பழமையான இந்த முத்துமாரியம்மன் கோவில் வழிபாடுகளின் மூலம் இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைத்து வாழ்க்கையில் நலமுடன் வாழ வேண்டும் உங்களோடு இனைந்து நானும் வேண்டி கொள்கிறேன் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞானராஜ், பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பொன்ராஜ், பிரபு, துணைச்செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், கனகமாரியப்பன், மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் , மற்றும் மாரிசெல்வ ஈஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments