முத்துலாபுரம் சிவன் கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷம்!! நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பவானிஷ்வர், அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பாள் ஆலயத்தில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரதோஷ தினம் சனிக்கிழமையில் வருவது சிறப்பு வாய்ந்ததாகும் ஆனி மாதம் கடைசி சனிகிழமையான சனி பிரதோஷம் முத்துலாபுரத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பவானிஷ்வர் , அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பாள் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சனி பிரதோஷத்தையோட்டி சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் பால், தயிர், இளநீர், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. பின்னர் சுவாமி அம்பாள் நந்தியபெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் நந்தியபெருமானை தரிசித்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments