வேலூர் சரக காவல்துறையினரின் "Call Tracker" எனும் புது முயற்சி!! காணாமல் போன செல்போனை கண்டுபிடிப்பது இனி சுலபம்!!!

தொலைந்த அல்லது திருடு போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதியை வேலூர் மாவட்ட காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு செல்போன் தொலைந்தாலோ, திருடு போனாலோ அதனை கண்டுபிடிப்பதற்காக காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தொலைந்த அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க வேலூர் காவல்துறையினர் ‘செல் டிராக்கர்’ என்ற செயலியை வேலூர் சரக டி.ஐ.ஜி  Dr.M.S. முத்துசாமி I.P.S S.P திரு. N.மணிவண்ணன் I.P.S ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த செயலியில் தொலைந்த செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் ஐஎம்இஐ எண்ணை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொலைந்த செல்போன் குறித்து வாட்ஸ்அப் அல்லது செயலி மூலம் புகார் அளித்தாலே செல்போன் கண்டுபிடித்து தரப்படும் என்றும் காவல் நிலையம் செல்லத் தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments