கோவையில் அதிநவீன வசதிகள் கொண்ட திரை அரங்கு!! தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர்!!!

கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர். இந்த 70 அடி அகல திரை கொண்ட அரங்கு தான் தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கு ஆகும் கியூப் சினிமா மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து கோவையில் உள்ள பிராட்வே மெகாப்ளக்ஸ் வளாகத்தில் தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை கோவையில் அறிமுகம் செய்தனர்.

இது தமிழகத்தின் முதலாவது எப்பிக் PLF திரை வசதி கொண்ட அரங்கு மட்டுமல்ல இந்தியாவின் இரண்டாவது எப்பிக் PLF திரையரங்கு ஆகும். பிராட்வேயில் உள்ள இந்த திரை 70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட திரை ஒரு சொகுசான சூழல் பொருந்திய அரங்கில் மிக சௌகரியமான இருக்கை வசதிகளுடன் அமைக்கபட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் திரைப்படத்தை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெரும் படி அமைக்கபட்டுள்ளது. இந்த எப்பிக் அரங்கில் BARCO 4K RGB லேசர் புரோஜெக்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக, அதிக பிரகாசமாக, மிக சிறந்த வண்ண அம்சங்களுடன் பார்த்து மகிழ முடியும். ஒலி அம்சத்தை பொறுத்தவரை DOLBY Atmos அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது பேசிய கியூப் சினிமாவின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹாத்கி கூறியதாவது: -

"சினிமா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கியூப் நிறுவனம் இதில் எப்போதுமே முன்னணியில் உள்ளது. எங்களின் பிரீமியம் திரை வசதிகள் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை அனுபவிக்க வழிவகை செய்யும். இதனால் பார்வையாளர்கள் மீண்டும் இந்த அரங்கிற்கு நிச்சயம் வர விரும்புவார்கள். இந்த அரங்கில் உள்ள திரையின் அளவு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஒலி, ஒளி வசதிகள் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும்" இவ்வாறு கூறினார்.

பிராட்வே சினிமாஸின் நிர்வாக இயக்குநர் சதிஷ் குமார் கூறியதாவது: -

"நாங்கள் பிராட்வே மல்டிபிளெக்ஸ் பற்றி முதலில் திட்டமிட்டபோதே இது மல்டிபிளெக்ஸ் ஆக இருப்பதை தாண்டி குடும்பங்கள் தங்கள் ஓய்வு நேரத்தை மிக சிறப்பாக கொண்டாடி மகிழக் கூடிய இடமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கு நிச்சயமாக ஈடில்லாத திரைப்பட அனுபவத்தை வழங்கும். தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரையை கொண்ட வளாகமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments