இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்முதல் டி20 போட்டி!!

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 5 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் நடைபெறுகிறது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments