கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு, வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை!!

கிரடாய் அமைப்பின் சார்பில் கோவையில் ஃபேர்புரோ 2023 வீடு, வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 11 – 13 வரை நடைபெறுகின்றது.

எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ தருகிறது ஏராளமான சலுகைகள் கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (2023 ஆகஸ்ட் 11 முதல்) துவங்கி 13 வரை கோவை கொடிசியா வளாகத்தில் நு-ஹாலில் நடைபெறுகின்றது.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ ஏராளமான சலுகைகளை இந்த முறை தருகின்றது. அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகைகளுடன் வீடு வாங்கும் விற்பனையை கிரடாய் நடத்துகிறது. இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே. ஃபேர்புரோ கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினர்கள் மற்றும் முன்னனி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளனர். 

வீடு மற்றும் வீட்டுமனை வாங்க விருப்பம் உள்ள உங்கள் நண்பரை ஃபேர்புரோவில் அறிமுகம் செய்து பரவசமூட்டும் போனஸ் பெறுங்கள். நீங்கள் உங்கள் நண்பருக்கு கனவு இல்லத்தை வாங்க ஃபேர்புரோ அறிமுகம் செய்தால், கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களில் ஒவ்வொரு வெற்றிகரமான அறிமுகத்திற்கும் ரொக்க பரிசாக சுமார் 25,000 ரூபாயை ஊக்கத்தொகையாக நீங்கள் பெறலாம். நண்பர் அறிமுக திட்டத்தை எளிமையாக்கும் விதமாக இது டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடுகளை பதிவு செய்து, வாட்ஸ் ஆப் போன்றவைகளில் தொடரலாம். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எளிதான, வெளிப்படையான பரிவர்த்தனைக்கு இது உதவும். இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல், உங்கள் நண்பர்களுக்கு நல்ல வீடு அமைய உதவி செய்வதோடு, பரிசுகளையும் அள்ளுங்கள்.இந்த வீடு வாங்கும் திருவிழாவிற்கு பாரத ஸ்டேட் வங்கி கண்காட்சிக்கான டைட்டில் ஸ்பான்சராக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மேலும் கோல்டன் ஸ்பான்சராக கனரா வங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.

ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சியின் சிறப்புகள். 25 முக்கிய டெவலப்பர்கள், பங்கேற்பு, 75-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 6 முன்னணி அரசு மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்பு, வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்டுகள் விற்பனை ஆகும்.இந்த வீடு விற்பனை திருவிழா, குறைந்த கால அளவு சலுகை வாய்ப்பு.

ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோர், ஏஜென்ட்டுகள், கூடுதல் சலுகைகள் மற்றும் வீடு வாங்க விருப்பம் உள்ளோருக்கு தனித்துவமிக்க சலுகைகள் உள்ளன. வீட்டுமனை மீதான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தில் சலுகை, இலவச வசதிகள், எளிதாக பணம் செலுத்தும் திட்டம், சொத்து வாங்குவோருக்கும், குடும்பத்தினருக்கும், தேடுவோருக்கும் இது ஒரு மிக அருமையான தருணம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வீடு விற்பனை திருவிழா, மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், புதிய தொடக்கத்தையும் கொடுக்கும். தீபாவளி போன்ற மகிழ்ச்சியை தரும் வீட்டுமனை திருவிழாவோடு கனவு இல்லத்தை தேடி தேர்வு செய்வதோடு, சொத்து மீது முதலீடு செய்யவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். இன்று நடைபெற்ற துவக்க விழாவிற்கு தமிழக வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. எஸ். முத்துசாமி, 

முதன்மை செயலாளர் செல்வி. அபூர்வா, தமிழக அரசின் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர் திரு. பி. கணேசன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. மு. பிரதாப், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் திரு. வி. பாலகிருஷ்ணன், கிரடாய் தென்னிந்திய மண்டல தேசிய துணைத் தலைவர் திரு. எஸ். ஸ்ரீதரன், கோவை கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, ஃபோர்புரொ ஒருங்கிணைப்பாளர் திரு. முகமது ஷபி செயலாளர் திரு. எஸ்.ஆர். அரவிந்த்குமார் உட்டப ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments