கோவையில் ‘ஹெலோபோட்ஸ்'23’ ரோபோட்டிக்ஸ் கண்காட்சி!!

கோவையில் ‘ஹெலோபோட்ஸ்'23’ ரோபோட்டிக்ஸ் கண்காட்சி ஆகஸ்ட் 31–ந்தேதி வரை நடக்கிறது. தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹெலோபோட்ஸ்'23’ என்னும் தொழில்நுட்ப கண்காட்சியை ஆகஸ்ட் 15 முதல் 31–ந்தேதி வரை கோவை நவ இந்தியா சாலையில் உள்ள இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்துகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் துவக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தார். ரோபாட்டிக்ஸ் கல்வியில் முன்னோடியாக திகழும் இன்கர் ரோபாட்டிக்ஸ், சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூரில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சியை நடத்தியது. இதை 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டனர். 

அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோவையில் இந்த கண்காட்சியை இந்நிறுவனம் கோவையில் நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் தொழில்துறை மற்றும் மனித உருவ ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, 3டி பிரிண்டர்கள், ட்ரோன் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் இந்த கண்காட்சியை இன்கர் நடத்துகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகுல் பி பாலச்சந்திரன் கூறுகையில்: 

"வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் அந்த தொழில்நுட்பம் அனைவரும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். அதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த கண்காட்சியை நாங்கள் இங்கு நடத்த இருக்கிறோம். இது தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதை பிரதிபலிக்கிறது. கோயம்புத்தூரில் நடைபெறும் கண்காட்சியானது நாட்டினுடைய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ட்ரோன் வேர்ல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டபிள்யூஜி சிடிஆர் சதீஷ் குமார் கூறுகையில், எதிர்கால தொழில்நுட்பங்களில் எங்களின் நிபுணத்துவத்தை தொழில்துறை நகரமான கோவைக்கு அறிமுகப்படுத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ரோபாட்டிக்சின் ஆக்கப்பூர்வமான திறனை வெளிக்கொணரவும், இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ரோபோ குறித்த கல்வியறிவை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கோயம்புத்தூர் போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் இதுபோன்ற கண்காட்சியை இன்கர் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும் என்று தெரிவித்தார். 

இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் டி. ஆர். கே சரசுவதி கூறுகையில்: "எங்கள் இளம் திறமையாளர்களுக்கு எதிர்கால தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த இன்கர் ரோபாட்டிக்ஸ் நிபுணர்களுடன் இணைந்திருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments