73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்- பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர்...

 

-MMH

பிரதமர் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்- பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர். 

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 73வது பிறந்தநாள் காண்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிப்பாளையம்- போத்தனூர் சாலையில் உள்ள சக்தி பள்ளிக்கு எதிரில் 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பூமி பூஜை செய்து திருமணத்திற்கான பணிகள் துவங்கியது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ,மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராசலம் சந்திரசேகர்,குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments