வாலிபர் தற்கொலை!!

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம் மசினகுடி மாயார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மகன் பிரதீப் (வயது26). இவர் மைசூ ரில் உள்ள மருத்துவ மனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.

இவருடைய மகள் காவ்யா (26). இவர்கள் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். காவ்யா கோவை சரவணம் பட்டி நேருநகர் 3-வது வீதியில் கடந்த 2 மாதமாக வாடகைக்கு தங்கி பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவ்யாவுக்கு வருகிற 8-ந் தேதி பிறந்த நாள் ஆகும். எனவே காதலியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பிரதீப் கடந்த 26-ந் தேதி காவ்யாவின் வீட்டிற்கு வந்து தங்கினார். இந்த நிலை யில் நேற்று காலை காவ்யா தனது தாயாரிடம் பேசுவதற்காக வீட்டின் மாடிக்குச் சென்றார். பின்னர் அவர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது பிரதீப் சமையல் அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யா அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிரதீப்பை கீழே இறக்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பிரதீப்பை பரிசோதனை செய்தவர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments