முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் நடராஜன் மேல்நிலைப் பள்ளியில்  1972-73 SSLC மாணவர்களின் பொன்விழா ஆண்டு நேற்று காலை நடைபெற்றது. 50 ஆண்டுகள் தலைமுறை கடந்த ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகிகள் மலரும் நினைவுகளுடன் சந்திப்பு சங்கம் நிகழ்ச்சி.

முதலில்  இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, பின்னர் அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது,  அதன் பின்னர் மாணவர்கள் அவர்களைப் பற்றிய அறிமுகம்  நிகழ்ச்சி 1972-73 மற்றும் அதற்கு முன்னால் மாணவர்கள் ஆகியோர் அறிமுகம் செய்து கொண்டார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

அந்தப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் முதல் மதிப்பெண்  பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப்பின் வாழ்த்துரை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா கலந்துரையாடல் ஆகியவை நடைபெற்றன.

இந்த பொன்விழா நிகழ்ச்சி தலைமை ரகுநாதன், முன்னிலை பிரகஸ்பதி, மரிய அமல்ராஜ், சண்முகம் ,முத்துமாரியம்மாள் வரவேற்புரை பாலகிருஷ்ணன், துவக்க உரை சங்கரநாராயணன், அறிக்கை வாசித்தல் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், வாழ்த்துரை முன்னாள் நிர்வாகி திருவாளர் ரங்கன் அவர்கள், 

முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் முத்துசாமி முன்னாள் ஆசிரியர் எழுத்தாளர் நாடக நடிகர் ஆல் இந்தியா ரேடியோ கலைஞர் மற்றும்  முத்துராஜா பாண்டியன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் ஓய்வு மதர் தெரசா முதன்மை ஆலோசகர் அவர்கள் மற்றும் முன்னாள் நீதிபதி சரவண பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments