இயக்குநர்கள் லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் ஆகியோர் சிறந்த இயக்குனர்கள்- நடிகர் விஜய்தேவர் கொண்டா பேட்டி!!
இயக்குநர் சிவா நிர்வான இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தா உட்பட முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் குஷி. இப்படம் செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்து உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்திற்காக ப்ரமோசன் பணிகளில் திரைப்பட குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேட்டியளித்த அவர், செப்டம்பர் 1"ம் தேதி குஷி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது எனவும் இதில் நானும் சமந்தாவும் நடித்துள்ளதாகவும் கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காதல் கதை சார்ந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகி உள்ளது என தெரிவித்த அவர், இதனை அனைவரும் தரையரங்குகளுக்கு சென்று காணுங்கள் என்றார். தமிழ் ,தெலுங்கு பொன்ற படங்களை பொருத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
தமிழில் விஜய் நடித்த குஷி படமும் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த குஷி படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்ராக அமைந்தது என கூறிய அவர், நீ தானே என் பொன்வந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன் எனவும், சமந்தாவின் ரசிகன் நான் எனவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள் என தெரிவித்த அவர், குஷி குடும்பங்களுடன் வந்து பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது என தெரிவித்தார். தமிழக மக்கள் கண்டிபாக குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள் என்றார். ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்த முறை சமந்தாவுடன் நடிக்க தயாராக உள்ளேன் எனவும் கூறினார்.
மாவீரன் படம் நேற்றைய தினம் பார்த்தேன் , படம் மிகவும் பிடித்தது எனவும், சிவ கார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார் என தமிழில் லோகேஷ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள் எனவும், இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவரின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்தார். காலா, கபாலி போன்ற படங்களின் கேமரா மேன் முரளி இந்த படத்திலும் எங்களுடன் இணைந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜெயிலர் படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படத்தின் ரிவ்யூ நன்றாக உள்ளது எனவும், ஜெயிலர் படம் அதிகமான வசூல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.தற்போது வரக்கூடிய படங்கள் வெளிநாடுகளில் பயணிக்காமல் இங்கேயே காஷ்மீரில் படமாக்குவது - படக்காட்சிகளுக்கு ஏதுவாக அமைகிறது எனவும் , காஷ்மீர் மக்கள் நன்கு பழகக் கூடியவர்கள், படக்காட்சிகளை எடுப்பதற்கு அனைத்து பாதுகாப்பும் அனைத்து வசதிகளும் காஷ்மீரில் உள்ளது என தெரிவித்தார்.
அனைத்து மொழி படங்களிலும் படம் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்படுகின்றது என தெரிவித்த அவர், குஷி படத்தின் இசையமைப்பாளர் கேரளாவை சேர்ந்தவர் மற்ற கலைஞர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றார். முக்கியமாக சினிமா துறையில் திறமை என்பது அவசியமானது எனவும், திறமையின் மூலம்தான் சினிமா துறை பயணிக்கிறது எனவும், அந்த பார்வையில் தான் நான் இத்துறையை பார்க்கின்றேன் எனவும் கூறினார்.
-சீனி, போத்தனூர்.
Comments