எடப்பாடி பழனிசாமி மதுரைக்குள் நுழையக்கூடாது..! எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தை தொண்டர்களுக்கு நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநில மாநாடு நடத்த தேதி அறிவித்தார். 

அதன் படி வருகிற 20 ஆம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சென்னையில் தங்கள் அணியின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது ஒருபுறம் நடைபெறும் நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் தேசிய கழகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், சாதிய வன்மத்துடன் 10.5% உள் இட ஒதுக்கீடு மூலம் நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி மற்றும் இனத்துரோகியை புறக்கணிப்போம் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா உங்கள் துரோகத்தை, புறக்கணிப்போம் எடப்பாடியை, புரிந்து கொள்வோம் அரசியல் துரோகத்தை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடியே மதுரை மண்ணிற்குள் நுழையாதே என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Comments