அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி பாண்டவர்மங்களம் பஞ்சாயத்து,தந்தை பெரியார் நகரில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீட்டு தீர்வை மற்றும் மின் இணைப்பு பெற்று தர வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் பாபு முன்னிலையில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த ஆகஸ்ட்  8 தேதி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் குடியேறும் போராட்டம்‌ நடைபெற்றது பின்னர் ஒன்றிய அலுவலகத்திற்குள் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், விறகு என அனைத்து பொருட்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா,தூத்துக்குடி மாநகரச்செயலாளர் தனலட்சுமி,மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ்,தாலுகா துணைச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில குழு ஞானசேகர், வழக்கறிஞர் முத்துலட்சுமி, துணைச்செயலாளர் முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments