ஓணம் பண்டிகைக்கான பூக்களின் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை!!!

 

-MMH

ஆன்லைனில் மலர் வியாபாரம் நடைபெறுவதால் மலர் அங்காடியில் பொதுமக்கள் கூட்டம் குறைவு கோவை மாவட்ட மலர் வியாபாரி சங்கத்தின் பொருளாளர் அய்யப்பன் பேட்டி கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு முக்கிய பொருட்களாக பூக்கள் தேவைப்படுகிறது. கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாட்டில் பூக்கள் வியாபாரம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காலகட்டத்தில் பிறகு மலர் வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரி சங்கத்தின் பொருளாளர் ஐயப்பன் கூறுகையில்;

ஓணம் பண்டிகைக்கு கேரளாவிற்கு நூறு டன் பூக்கள் விற்பனை ஆவது வழக்கம். ஓணம் பண்டிகை நெருங்கும்போது 150 முதல் 200 டன் வரை பூக்கள் விற்பனை நடைபெறும். ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கேரளா வியாபாரிகள் நேரடி கொள்முதல் விற்பனையால் பாலக்காடு, திருச்சூர்,

எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் மூலம் மலர் வியாபாரம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் மலர் அங்காடிக்கு மக்கள் வருவதை தவிர்க்கின்றனர். மேலும் இலவச டோர் டெலிவரியும் செய்யப்படுவதால் மக்கள் கூட்டம் குறைந்தும் சந்தையில் வியாபாரம் குறைந்தே காணப்படுகிறது என தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments