வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் ஆனைமலைக்கு மாற்றமா..? சார் ஆட்சியருக்கு மனு..!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தனது வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் ஆட்டோ, ஓம்னி, வேன், டூரிஸ்ட் வாகனம், லாரி போன்ற வாகனங்கள் வைத்திருப்போர்களும், ஏற்கனவே வாகன ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கும், புதியதாக பதிவு செய்வதற்கும் சிரமப்படக் கூடாது என்பதற்காக வால்பாறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கிளை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இந்த அலுவலகம் தற்பொழுது ஆனைமலைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது இதை அறிந்த வால்பாறை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து வால்பாறையில் இவ்வலுவலகம் செயல்பட பரிந்துரைக்குமாறு ம் இவ்வலுவலகம் ஆனைமலைக்கு மாற்றப்பட்டால் வாழ்வாதாரத்தை நம்பியிருப்பவர்களும், சான்றிதழ் பெறுபவர்களுக்கும் நேர விரயம் மற்றும் பண விரயம் ஏற்படும் இதனால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என சமூகம் ஆர்வலர் வால்பாறை  P.பரமசிவம் CITU சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களுக்கு மனு  அளித்துள்ளார்.

-M.சுரேஷ்குமார்.

Comments