கோவை ப்ராட் வே சினிமாஸ் இல் தான் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தை வியந்து பார்த்து ரசித்த நடிகர் சசிகுமார்!!

சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு  பிறகு  மீண்டும் திரையரங்குகளில்  வெளியாகி உள்ளது. கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே சினிமாஸ் இல் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் ப்ராட் வே சினிமாஸ் வந்து ரசிகர்களை சந்தித்தனர்.தொடர்ந்து ரசிகர்களிடன் அமர்ந்து சுப்ரம்மணியபுரத்தை கண்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

15 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பிரமணியபுரம் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும் முன்பாக எந்த காட்சியை பார்த்து திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டினார்களோ அந்த காட்சியைப் பார்த்து இப்போதும் கூட கைதட்டுகிறார்கள். இன்றைக்கும் இந்த மாதிரியான ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை..சில படங்களில் நடித்து வருவதாக கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments