நாங்குநேரி சின்னத்துரை அவரது தங்கையை அரசியல் கட்சியினர் நேரில் சந்திப்பு!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நாங்குநேரி ஊரை சார்ந்த சின்னத்துரை என்கின்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவன் சின்னதுரையை பார்க்க சென்றிருந்தோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அங்கு கையில் நரம்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது அதனால் அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருடைய தங்கையை பார்த்தோம் கையில் பெரிய கட்டுடன் வெள்ளை சட்டை அணிந்து மிகவும் கவலையோடு எங்களோடு பேசிக் கொண்டிருந்தார் அவருடைய தாயார் அம்பிகாபதி அவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினோம். தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கிற மாணவன் சின்னத்திரைக்கு எப்படி நாம் ஆறுதல் கூறுவது என்று அவருடைய அம்மா அம்பிகாபதி அவர்களிடம் நாங்கள் மிகவும் வேதனையோடு எடுத்துச் சொன்னோம்.

சின்ன துரையின் தாயார் அம்பிகாபதி மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை நாம் காண முடிந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் எப்படி மிக கொடூரமான புத்தி அதுவும் அருவாளை எடுத்து சக மாணவனை வெட்டுகின்ற அளவுக்கு தைரியம் வந்தது என்பதை பார்த்து வியந்தோம். சின்ன துரையின் தாயார் அம்பிகாபதி எங்களிடம் கூறுகின்ற பொழுது ஐயா என் பையன் சின்னத்துரைக்கு 18 விட்டு விழுந்திருக்கு ரத்தம் படிக்கட்டு தரையில எல்லா பக்கமும் சிதறிட்டு என்னுடைய மக சந்திரா தடுக்க முயன்ற அவளுக்கும் கையில விட்டு விழுந்தது என்று பதறிக் கொண்டே எங்களிடம் சொன்னார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வெட்டு நடந்து கொண்டிருக்கும் பொழுதே ரத்தத்தை பார்த்து நான் மயங்கி விழுந்து விட்டேன். எனது சித்தப்பா சித்தியினுடைய மாப்பிள்ளை அவர்கள் வயது முதிர்ந்தவர் இந்த காட்சியை கண்டவுடன் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்தில் மரணித்து விட்டார். இவ்வளவு பெரிய கொடுமை எனக்கு வந்தது நினைத்து நாம் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு கொடுமை நடக்கிறது என்று தினமும் வேதனையோடு இருக்கிறேன். நான் சத்துணவில் ஆயாவலை பார்த்து எனது பிழைப்பை நடத்திக் கொண்டு வருகிறேன் என்று கண்ணீரோடும் கவலையோடும் எங்களுடைய எடுத்துக் கூறியது மிகவும் வேதனையாக இருந்தது. 

சுதந்திரம் வாங்கி 76 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு தீண்டாமை நடக்கிறது என்பதை நாங்கள் வேதனையோடு பகிர்ந்து கொண்டோம். சமூக நீதி பேசுகின்ற திராவிட முன்னேற்ற கழக அரசு பாதிக்கப்பட்ட சின்னத்திரை குடும்பத்திற்கு நிதியும் நிவாரணம் கொடுப்பது  ஆறுதலாக இருந்தாலும் பள்ளிக்கூடங்களில் நீதி போதனைகள் வகுப்புகள் நடத்தி மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை அடியோடு வேரறுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்பதுதான் நாம் வைக்கின்ற கோரிக்கை. அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பார்த்து செல்வதால் ஆறுதல் சொல்வதால் என்ன பயன் பொதுமக்களிடையும் மாணவர்களிடையும் ஏற்படுகின்ற சாதி மதங்களை அடியோடு தவிர்ப்பது எப்படி என்பதை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்னதுரையின் தாயார் அம்பிகாபதி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்ட மதிப்பிற்குரிய தோழர் சுப. உதயகுமார் அவர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர்களோடும் எங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அவர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சுப .உதயகுமார் அவர்களும் நாங்களும் சின்ன துரையின் தாயார் அம்பிகாபதிக்கு ஆறுதல் சொல்லி முடித்துவிட்டு மருத்துவமனை விட்டு வெளியேறினோம். சின்னதுரையின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல அநேக சமூக இயக்கங்கள் சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையில் திரண்ட இருப்பதை பார்க்க முடிந்தது. அது சற்று ஆறுதலாக இருந்தது எவ்வளவு தான் தீண்டாமை சாதிய கொடுமை நடந்தாலும் சாதியை ஒழிக்கின்ற சமூக ஆர்வலர்கள் இந்த நாட்டில் இருக்கிறார் என்பதை சற்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே பகிர்ந்து கொண்டு வீடு திரும்பினோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்  அசன் அவர்களும், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர்  தாஸ் அவர்களும், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் சுஜித் அவர்களும், தமிழர் விடியல் கட்சி தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ் தமிழர் விடியல் கட்சிமாவட்ட மாணவரணி பொறுப்பாளர்  டேவிட் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments