கருமலை எஸ்டேட் பகுதியில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் கூட ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் இருப்பதில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை வெயில் பார்க்காமல் வனவிலங்குகள் தாக்குதல் பயத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை செய்து வருகின்றனர்.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பஜார் பகுதிக்கு அருகில் குடியிருப்புகள்  உள்ளன.இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை சேகரித்து போடுவதற்கு உண்டான குப்பை தொட்டிகள் இல்லாமல் குப்பை கழிவுகளை பொதுவெளியில் கொட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குப்பை தொட்டிகள் இல்லாமல்  குப்பைகளை  பொதுவெளியில் மற்றும் நடைபாதையில் கொட்டுவதால் காற்று பலமாக அடிக்கும் சமயங்களில் போய் கழிவுகள் காற்றில் பறந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்கின்றன. மேலும் மழைக்காலங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே குப்பை கழிவுகள் பிரித்து கிடைக்கின்றன மேலும் குப்பை கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகின்றன இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குப்பை கழிவுகள் அகற்றாமல் துர்நாற்றம் வீசி வருவதால் அவ்வழியே பள்ளி குழந்தைகள் செல்வதினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது உடனே அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை கழிவுகளை போடுவதற்கு என்று குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments