கோவை புரோசோன் வளாகத்தில் ஆட்டோ ஷோ!! பைக் மற்றும் ஸ்கூட்டர்கள், கார்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் என அனைத்து முன்னனி நிறுவனங்கள் பங்கேற்பு!!

கோவையில் ஆட்டோ ஷோ எனும் வாகனங்களுக்கான கண்காட்சியை நடத்தி வரும் அட்வேவ்ஸ் (Adwavess) நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது ஆட்டோ ஷோ கண்காட்சியை துவக்கி உள்ளது. கோவை சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தில் ஆகஸ்ட் 18ந்தேதி துவங்கி 20ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் இந்து தமிழ் ஹலோ எப்.எம்.புரோசோன் மால் செய்தியாளன் ஆன் லைன் சேனல் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் இதில் புதிய வகை மாடல் கார்கள் மற்றும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள், வணிக பயன்பாடு வாகனங்கள், எலக்ட்ரிக் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து தர முன்னனி நிறுவனங்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் எளிய முறை நிதியுதவிக்கு பைனான்ஸ் எக்ஸ்போ, பழைய வாகனத்தை மாா்க்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்க, மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா, கண்காட்சியை காண வருவோருக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாவை இணைத்து இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து அட்வேவ்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெரால்டு ஜெயப்பிரகாஷ் கூறுகையில் வார இறுதியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடவும் அதே நேரத்தில் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது கனவு வாகனத்தை வாங்குவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக ஒரே கூரையின் கீழ் நடுத்தர மற்றும் சொகுசு வாகனங்கள் வரை அணிவகுத்துள்ள இந்த கண்காட்சியை காண கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். முன்னதாக நடைபெற்ற ஆட்டோ ஷோ துவக்க விழாவில் ரமணி குழுமங்களின் இயக்குனர் சசிகுமார் கோவை ஹுண்டாய் அபுதாகீர், இந்து தமிழ் திசை சி.ஓ.ஓ.சங்கர் சுப்ரமணியம், எம்.ஜி.கோயமுத்தூர் சத்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments