கோவையில் நொய்யல் திருவிழா!! தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்களுடன் தொடக்கம்!!!

 

-MMH

கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் துவக்க விழா முன்னிட்டு இன்று தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் நடைபெற்றது.

பார்வையாளர்களை மிகுந்த கவனத்தில் ஈர்த்ததில் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பான நடனமாக கருதப்படும் பெருசலங்கை நடனம் முருக கடவுளின் காவடி சிந்து பாடலுக்கு,

பெண்கள் அணிவகுத்து ஆடியது அனைவரும் கவர்ந்தது. மேலும் நொய்யல் திருவிழா முடியும் வரை பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடைபெறவிருப்பதாகவும் பல்வேறு தலைப்புகளில் முக்கியஸ்தர்கள் வந்து உரையாற்றுவார்கள் அதன் மூலமாக நொய்யலை மீட்டெடுக்க நிகழ்ச்சிகளை நடத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-சி.ராஜேந்திரன்.

Comments