பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!!

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று  நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியம்  பாஞ்சாலங்குறிச்சி  பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர்    கிராமத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ் அவர்களின் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும், இந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதும் அவசியம் .

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, ஜல் ஜீவன்இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புதிட்டம் ஆகியவை குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments