மதுரை மாநாடு அதிமுகவிற்கு திருப்பு முணையை ஏற்படுத்தும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தகவல்!!

தூத்துக்குடி  அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் நடைபெறுகிறது.

இதனையடுத்து தூத்துக்குடியில் மாநில அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் சிதம்பரநகரில் உள்ள மாநில அமைப்பு செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அரசியலில் தன்னை நிலை நிறுத்தி கொள்ளவும் கொள்கைகளை தெரிவிக்கவும் மாநாடு நடைபெறுகிறது. அண்ணா காலத்தில் திமுக மாவட்டம் தோறும் மாநாடு நடத்தியது.

அண்ணா மறைவிற்கு பின் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். அதில் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகபடுத்தி கொள்கைகளை வெளிப்படுத்தி எம்.ஜி.ஆர் மாநாடு நடத்தி திருப்பு முனையை கண்டார். அவரது மறைவிற்கு பின் கழகம் இரண்டாவது முறையாக ஜெயலலிதா மாநாடு நடத்தி வரலாறு படைத்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையெல்லாம் கடந்த கால வரலாறுகள் ஒரு கட்சியின் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் அதன் வழியில் தான் ஆகஸ்ட் 20ல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் எல்லா வழிகளிலும் கடுமையான சோதனைகளை கடந்து தனது திறமைகளின் மூலம் வெற்றியை கண்ட மூன்றாம் தலைமுறை எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தபின் நடைபெறும் மாநாட்டில் தூத்துக்குடியிலிருந்து அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை வென்று காட்டுவதற்கு நாம் களப்பணியை தொடங்க வேண்டும். அதன் வெற்றியை பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் சமர்ப்பிக்க சபதம் ஏற்க வேண்டும் என்று பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் அரசு வக்கீல் கோமதி மணிகண்டன், முன்னாள் மாவட்ட மீனவரணி இணைச்செயலாளர் துரைப்பாண்டியன், மாநகராட்சி ஒய்வூதியர் நலச்சங்க தலைவர் சுடலைமுத்து, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர்கள் அன்புலிங்கம், பாலசுப்பிரமணியன், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சங்கரி, கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் ஆறுமுகம், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், சிறுபான்மை பிரிவு அணி அசன், பிரபாகரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், அசரியான்,  வட்டச்செயலாளர்கள் ராஜா, சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், துரைசிங், அந்தோணிராஜ், பகுதி அவைத்தலைவர் வக்கீல்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, அசோகன், சீனிவாசன், கோட்டாளமுத்து, 

முருகன், பாபநாசம், சங்கர், சகாயராஜ், ஹரிகிருஷ்ணன், பாக்கியராஜ், ஜெயராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியம்மாள், மற்றும் மனோகர், அந்தோணி சேவியர், முக்கையா, தனுஷ், மணிகண்டன், கருப்பசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், சின்னத்துரை, ஆறுமுகநயினார், ஆறுமுகம், சைய்யது அப்பாஸ், சுப்புராஜ், காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments