ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பத்து வயது சிறுமி!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் மற்றும் ரதிக்தேவி தம்பதியிரின் மகள் கவிநிலவு பத்து வயதான சிறுமி கவிநிலவு அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பம் கற்று வருகிறார். 

சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வமுடைய இவர் ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார  சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்னவேடம்பட்டி,மகாலட்சுமி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற  சாதனை நிகழ்வில் நடைபெற்றது. அதிகாலை ஆறு மணி முதல் மதியம் 12"மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுழற்றி  செய்த இவரது இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகம்,அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் மற்றும் யுரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது சிறுமி கவிநிலவு செய்த இந்த சாதனையை அங்கீகரித்து இந்தியா உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து  சிறுமி கவிநிலவு  கூறியதாவது

"77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அலங்கார சிலம்பம் ஒற்றைக்கம்பு வீச்சு 6 மணி நேரம் சுற்றி பல்வேறு உலக சாதனைகள் செய்துள்ளேன் இதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி என கூறிய அவர் கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளேன் என இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments