வால்பாறை முடீஸ் பகுதி பேருந்து நிறுத்தத்தை புதுப்பித்து தர பொதுமக்கள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட மூடீஸ் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். மூடீஸ் மற்றும் அதன் அருகில் உள்ள அனைத்து எஸ்டேட் பொதுமக்களும் வால்பாறைக்கு செல்ல வேண்டுமென்றால் முடீஸ் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இதுதான் செல்ல வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்படி உள்ள சூழ்நிலையில் இந்த பகுதிகளில் மழை பெய்யும் பொழுது மழை நீர் முழுவதுமாக பேருந்து நிறுத்த பகுதிக்குள் நுளைந்து குளம் போல் காட்சியளிக்கிறது  பேருந்து நிறுத்தத்தில் மழை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பகுதியாக காணப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்த போது பேருந்து நிலையத்தை மழைநீர் தேங்காதவாறு புதுப்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் மழைக் காலங்களில் நெடுஞ்சாலையில் நின்று பேருந்தில் ஏறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தண்ணீர் தேங்கியுள்ள பேருந்து நிறுத்தத்தை நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments