விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 16 நாட்கள் பூஜைகள் நடைபெறும் ஆர்.எஸ்.புரம் வித்தக விநாயகர் கோவில்!!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வித்தக விநாயகர் கோவிலில் 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் சிறப்பம்சம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருடம் தோறும் 16 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி 34 ஆம் ஆண்டான இந்த வருடமும் 16 நாட்கள் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு பத்து நாட்களும் விநாயகர் சதுர்த்தியோடு சேர்ந்து தொடர்ந்து ஆறு நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

தினமும் காலை 6:00 மணி அளவில் மகா கணபதி ஓமம் தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு சிறப்பாக 24 ஆம் தேதி உமா மகேஸ்வருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது மேலும் இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக தலைவர் சிவதேசிகன் ,செயலாளர் செல்வம் ,பொருளாளர் சீதாராம் கண்காணி ,உபத் தலைவர் சீனிவாசன் ,உபச்செயலாளர் விக்னேஷ் சங்கர் ,கௌரவ ஆலோசகர் கிருஷ்ணன் ,வெங்கடேசன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments