நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளியில் ‘நிர்மலதோனாஸ் 23’ ஆண்டு விளையாட்டு விழா!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மலா மாதா கான்வென்ட் ஐசிஎஸ்இ/ஐஎஸ்சி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா ‘நிர்மலதோனாஸ் 23’ எனும் பெயரில் நடைபெற்றது. தொடக்க விழாவில் தலைமை விருந்தினரான இந்திய கடற்படை ஐஎன்எஸ் அக்ரானி பயிற்சி தளபதி கமான்டர் ஹரி பிரசாத் கலந்து கொண்டு மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து விளையாட்டு கொடியினை ஏற்று வைத்தார். பள்ளி முதல்வர் ஜெயா தேசிய கொடியைை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் விளையாட்டு தீப ஒளி ஏற்றி வைக்கப்பட்டு, சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.  நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில், விளையாட்டிலும், வாழ்க்கையிலும் தோல்விகளைக் கடந்து அவர்களின் இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நிறைவு விழாவின் தலைமை விருந்தினரான கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் சோமசுந்தரமூர்த்தி பேசுகையில், மாணவர்களின் வாழ்க்கையில் உடல் தகுதி மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தடகள நிகழ்வுகள் தவிர, இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, உடற் பயிற்சி மாஸ்டர் ரெக்ஸ் தலைமையில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விளையாட்டு போட்டியில் நான்கு அணிகள் மோதியது. இதில் சபையர் ஹவுஸ் ஒட்டுமொத்த கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் ஜான் ஃபுஸ்டினோ மற்றும் பெண்கள் பிரிவில் ஜான்வி நேத்ரா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அருட்தந்தை. ஜெய்சன் சோத்திரக்கோட்டு, அருட்சகோதிரி. வின்சென்டியா, அருட்சகோதிரி. ரோஸ்லின் புல்லேலி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments