எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி மதிப்பில் 52 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்!!

எட்டயபுரம் அருகே  தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 52 குடியிருப்புகளை முதல்வர்  திறந்து வைத்தார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 52 குடியிருப்புகளை இன்று 17.9.23 திறந்து வைத்தார். 

அதைத்  தொடர்ந்து  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களும், குடியிருப்புகளுக்கான சாவியினை பயனாளிகளுக்கு வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments