3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோல்வி!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று.
2-0 என கைப்பற்றிய நிலையில், 3 வது போட்டி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸிதிரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்மித் 74 ரன்களும், லபுஷேன் 72 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 56 ரன்களில அவுட்டானார். இறுதியில் 49 புள்ளி 3 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments