ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 40 புதிய கிளைகளை துவக்கம்!!

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 40 புதிய  கிளைகளை துவங்குவதோடு 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிர்வாகிகள் கோவையில் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என  177 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,இந்நிறுவனம், தனது சேவையை  விரிவு படுத்தும் விதமாக  400 க்கும் மேற்பட்ட புதிய கிளைகளைத் திறக்கவும், அடுத்த ஓராண்டில் 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.. ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் தங்கநகைக் கடன்கள் பிரிவின் தலைவர் சவுரப் குமார், மற்றும்  தமிழக மண்டல வர்த்தக தலைவர் கார்த்திக், ஆகியோர் பேசினர். தங்கநகைக் கடன், வணிகக் கடன் தொடர்பாக  வங்கி வசதி குறைவாக உள்ள மற்றும் வங்கி வசதியே இல்லாத இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கும் வகையில்,புதிய கிளைகள் துவங்க இருப்பதாகவும், தங்கநகைகள் வைத்திருப்பதிலும் வாங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர்.

எனவே எங்கள் நிறுவனம், தமிழகத்தில் முக்கிய கவனம் செலுத்துவதாக தெரிவித்தனர். எங்கள் கிளைகள் அனைத்திலும் காகிதமில்லா செயல்முறையைப் பின்பற்றுவதாகவும்,இதனால் அனைத்து வகையான கடன்களையும் விரைவாக செயலாக்கி வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் வழங்குவதாக தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments