கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ஹென்றி!!

-MMH

கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ஹென்றிக்கு  கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக   அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றி கோவை விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில்,ஃபேரா அமைப்பின்  தேசிய துணை தலைவர் செந்தில் குமார் தலைமையி்ல் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,ஃபேரா அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழரசன்,தேசிய செயற்குழு உறுப்பினர் வில்சன் தாமஸ்,பாலசுப்ரமணியன்,வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், ஜெயம்  கண்ணன்,மெடிக்கல் நாராயணன், தியாகராஜன்,செல்வகுமார் மோகன்ராஜ், பால்ராஜ், மணிகண்டன், கிரிதரன், ராஜேஷ், ஐயப்பன், மாணிக்கம், மற்றும் தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலர்  கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபேரா அமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பட்டா மனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர்,  பதிவு துறையில்,பல்வேறு நிலைகளில் உயர்த்தப்பட்டு கட்டணத்தை அரசு பரிசீலிக்க கேட்டு கொண்டார். 

முரண்பாடான கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, ரியல் எஸ்டேட் துறையினர், அரசு அலுவலர்கள்,மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி முறையான ஆய்வு செய்த பிறகு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

-சீனி, போத்தனூர்.

Comments