பேருந்து கட்டணத்தை குறைத்த முதல்வருக்கு நன்றிகள்! மேலும் கட்டணத்தை குறைக்க வேண்டுகோள்!!
வால்பாறை வணிகர் சம்மேளனத்தின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருமதி.பொன்மலர் தமிழக முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனுவில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் 10 பேருந்துகளுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம் பெறும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாற்றுத்தொழில் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதே போன்று இப்பகுதியில் இருக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் கட்டண குறைப்பு செய்ய வேண்டும். மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தையும் அக்காமலை மற்றும் வெளியூர் செல்லும் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வயதான முதியோர் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை சாலையோரம் இருக்கும் கடைகளில் அமர்ந்து பேருந்துக்காக காத்திருப்பதும்,
பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாமல் சரியான முறையில் நேர காப்பாளர் இல்லாமல் எந்த பேருந்து எங்கே போகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் வேதனை அடைகிறார்கள்.
இவர்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு மகளிருக்கான இலவச பேருந்தும், அனைத்து பேருந்துகளிலும் கட்டண குறைப்பும், பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளும், நிரந்தர நேர காப்பாளரும், பேருந்து கால அட்டவணையும் செய்து தர வேண்டுமென்று பொதுநலத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
-P.பரமசிவம், வால்பாறை.
Comments