தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ஏ.ஆர்.ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள்!!

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று கோவை திரும்பிய கோவை ஏ.ஆர்.ஸ்போர்ட்ஸ் அகாடமி  மாணவ,மாணவியர்களுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. கோவாவில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இராஜஸ்தான்,குஜராத்,, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  இந்தப்போட்டியில் பங்கேற்றனர்.

இந்தப்போட்டியில் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 5 பேர் உட்பட கோவையிலிருந்து 12  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் தனித்திறன் போட்டிகளாக நடைபெற்ற இந்த சிலம்பாட்ட போட்டியில் சுருள் வாள், வேல் ஒற்றைகம்பு, இரட்டை கம்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில்  கோவை யிலிருந்து கலந்து கொண்ட அனைவரும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியதோடு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும்  கைப்பற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக ஏ.ஆர்.ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும், பள்ளி ஆசிரியையான பூர்ணிஷா  மற்றும் அவரது 7 வயது மகன் திரனேஷ் ஆகிய தாயும்,மகனும்  தங்கம் வென்று அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். 

இந்நிலையில் கோவாவில் இருந்து கோவை திரும்பிய ஆசிரியை பூர்ணிஷா, திரனேஷ், ஜோன்ஸ் நேதன், அஜீஸ், கண்ணன், இஷானா ஸ்ரீ, ஆகிய சாம்பியன்களுக்கு கோவை இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர் ஸ்போர்ட்ஸ்  அகாடமி நிறுவனர் ராஜேந்திரன், மேலாளர் ஜோ மோசஸ் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments