மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!!

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி  ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் ஆதித்தமிழர்கட்சி  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன் அவர்கள் கலந்து கொண்டார்.

வீரவணக்க நிகழ்வின்போது தமிழினியன் முன்னாள் மண்டல‌செயலாளர் விசிக நம்பிராஜ்பாண்டியன் மாவட்ட செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முத்துசாமி மாவட்ட துணைச்செயலாளர் ஏரல் பெரியசாமி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி செயலாளர் முருகன், சுப்புராஜ் மற்றும் பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுரை மாநகரை அடுத்த அவனியாபுரம் பகுதியில் நீர் மேலாண்மை சார்ந்த மடைப்பணி செய்துவந்த இருளாயி அழகப்பன் இணையருக்கு மகனாக 11 மார்ச் 1954 அன்று பிறந்தார் மலைச்சாமி. இவர் தந்தை அழகப்பன் ஒரு அரசு எழுத்தராகவும் பணியாற்றினார்.

புகழ்பெற்ற அவனியாபுரம் சல்லிக்கட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த வீரர்கள் காளைகளைப் பிடிப்பதை எதிர்த்து 1980-இல் ஒரு சாதிய மோதல் திட்டமிடப்பட்டது. பெரியார் நகர் மக்களைத் திரட்டி அதை முறியடித்த மலைச்சாமி கைதுசெய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு அம்பேத்கரின் சிந்தனைகளைப் பின்பற்றி, தலித் மக்களின் விடுதலையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் போன்றவற்றின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மறைவு வாழ்ககை வரலாறு: 

14 செப்டம்பர் 1989 அன்று காலையில் உடல்நலக் குறைவால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலைச்சாமி, அன்று மாலையில் காலமானார் .

மலைச்சாமி வகித்த தலித் பேந்தர்ஸ் மாநில அமைப்பாளர் பொறுப்பை ஏற்கும்படித் திருமாவளவனை அவ்வமைப்பினர் பலமுறை வலியுறுத்தினர். இறுதியாக 21 சனவரி 1990 அன்று திருமாவளவன் அவ்வமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்  என மாற்றி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அப்பெயரில் ஒடுக்கப்பட்ட என்ற சொல்லை நீக்கி விடுதலைச் சிறுத்தைகள் என மாற்றினார். 14 ஏப்ரல் 1990 அன்று மதுரை கோ. புதூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் முதல் கொடியை அவர் ஏற்றினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments