ஓட்டப்பிடாரம் சிலோன்காலணியில் காளை மாடு முட்டி துாக்கியதில் குடல் சரிந்து ஒருவர் படுகாயம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலணியில் தோட்டத்தில் காளை மாடு முட்டி தூக்கி எறிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம்.

சிலோன் காலனியில் இருளாண்டி மகன் ராஜ்குமார் வயது 33 இன்று மதியம் 12:00 மணி அளவில் காளை மாட்டை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கு முயன்றுள்ளார் அப்பொழுது அந்த மாடு உரிமையாளரான  ராஜ்குமாரை தூக்கி தூக்கி புரட்டி எடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாருக்கு வலது பக்க விலாவில் குடல் வெளியே தெரிகிறது. இடது கால் முட்டிக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மேலும் இடுப்புக்கு கீழ் இரத்த காயம் உள்ளது என தகவல். 

தோட்டத்தின் அருகில் உள்ளவர்கள் ராஜ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments