கோவை ஆனைமலைஸ் டொயாட்டா ஷோரூமில் டோயோட்டாவின் புதிய வரவான டொயோட்டா ரூமியான் கார் அறிமுக விழா நடைபெற்றது

டொயோட்டா நிறுவனத்தின் இனோவா க்ரிஸ்ட்டா, இனோவா ஹைக்ராஸ், வெல்ஃபயர் கார்கள் வரிசையில், டொயோட்டாவில் இருந்து வரும் எம்.பி.வி மாடலில் டொயோட்டா நிறுவனம் ரூமியான் எனும் புதிய வகை மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

முன் பக்க கிரில், யூனிக்கான அலாய் வீல் டிசைன் உடன் அறிமுகமாகி உள்ள இதற்கான அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

7 சீட்கள் கொண்ட புதிய ரூமியான் மாடல் காரில் எஸ், ஜி, வி என்ற மூன்று வேரியண்ட்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெட்ரோல் மற்றும் சி.என்.ஜியில் இயங்கக் கூடிய வகையில் உருவாக்க ப்பட்டுள்ள இந்த காரின் துவக்க ஷோரூம் விலையாக ரூ.10.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டொயோட்டா ரூமியான் கார் அறிமுக நிகழ்ச்சியில், ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் சர்வீஸ் பிரிவு துணை தலைவர் சந்தோஷ், கெஸ்ட் ரிலேசன் பிரிவு தலைவர் ஜான் வில்லியம், கிளை மேளாலர் ஆனந்த் குமார், விற்பனை மேலாளர் விக்னேஷ் உட்பட வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments