"டிரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ்" மாநாடு!! கோவை எஸ். எஸ்.வி.எம் பள்ளியில்!!
பள்ளி பருவத்திலேயே மாணவர்களை மேம்படுத்துவதற்கும், அவர்களிடம் தொழில் அறிவை கொண்டு செல்லும் வகையில் கோவை எஸ். எஸ்.வி.எம் பள்ளியில் "டிரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ்" மாநாடு நடைபெற்று வருகிறது.
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள எஸ். எஸ். வி. எம் பள்ளியில் இரண்டாவது "டிரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ்" மாநாடு இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 21 பேச்சாளர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சிறிய பொருட்களை வைத்து கலை நயமாக மாற்றும் ராப் என்பவருடைய பயிற்சி பட்டறை, வீட்டில் மீதமாக உணவை பயன்படுத்தி புதிய உணவை எவ்வாறு வித்தியாசமான உணவு வகைகளாக மாற்றுவது தொடர்பான பயிற்சி பட்டறை, தேவையானவற்றை பயன்படுத்திக் கொண்டு, தேவையற்றவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் பயிற்சி பெற்றவை என என பல்வேறு பயிற்சி பட்டறைகள் இந்த மாநாட்டில் நடைபெற்று வருகின்றன.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் தொழில் அறிவை உருவாக்குவது, மாணவர்களின் திறனை மேம்படுத்தி உற்சாகப்படுத்துவதை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாணவர்கள் தங்களுடைய குரு யார் என்பதை தேர்வு செய்து அனுப்புகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் அடிப்படையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்படுகிறது. மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியில் தென்னிந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இந்தியப் பொறியாளரும், புதிய கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்விச் சீர்திருத்தவாதியான 3 இடியட்ஸ் திரைப்பட புகழ் சோனம் வாங்சுக் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது இப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொறியியல், மருத்துவம் போன்ற போட்டித் தேர்வுகள் தான் எதிர்காலம் என மாணவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதை மாற்ற வேண்டும் எனவும் இந்த மாநாடு மாணவர்களுக்கு உதவியாக இருப்பதோடு மாணவர்கள் வெற்றி பெற நிறைய வழிகள் உள்ளன என்பதை அறிவுறுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற மாநாடுகள் கோவையில் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவதோடு அரசு பள்ளிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments