மின் கட்டண உயர்வு-தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தொழில் துறையினர் பேட்டி!!

மின் கட்டணம் தொடர்பாக தொழில்துறையினரை சந்திக்க முதல்வர் தயக்கம் காட்டுவதாக கூறியுள்ள தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர். மீண்டும் சந்திக்க முயற்சி செய்வதாகவும் முதல்வர் சந்திக்க மறுத்தால் அதன் பிறகு தொடர் வேலை நிறுத்த போராட்டத்திக் ஈடுபட போவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும் கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும்  வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாக கூறினர்.

மேலும் வருடா வருடம் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு இருத்தல் வேண்டும், 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும்  பலமுறை தமிழக முதல்வரை மின் கட்டணம் தொடர்பாக அமைச்சர்கள் மூலமாக சந்திக்க முயற்சி செய்தும் ஏதோ ஒரு காரணத்தை கூறி முதல்வர் தொடர்ந்து தங்களை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகவும் முன்னால் மின் துறை அமைச்சர் தற்போதைதற்போதைய மின் துறை அமைச்சர், 

கோவைக்கான பொறுப்பு அமைச்சர் உள்ளிட்டோரை பலமுறை சந்தித்தும் பலனில்லாத சூழலில் மீண்டும் ஒருமுறை முதல்வரை மின்கட்டணம் தொடர்பாக சந்திக்க உள்ளதாகவும் அதில் மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்த போவதாகவும் தெரிவித்ததுடன், முதல்வர் தங்களை சந்திக்க மறுத்தால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments