உலக அல்சைமா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!!
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இன்று உலக அல்சைமா நோய் தினம் விழிப்புணர்வு குறித்து செவிலியர் மாணவ,மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.வாக்கத்தான் நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோ கலந்து கொண்டனர்.
அல்சைமா நோய் குறித்து செவிலியர் மாணவ,மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ரேஸ்கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர். அல்சைமா நோய் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயாகும்.நாட்கள் செல்ல செல்ல மறதி அதிகரித்து பாதிப்பு உண்டாக்கும். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள், முதியோர்கள் இந்த அல்சைமா நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதனை ஆரம்ப காலகட்டத்தில் சரி செய்வதற்காக இன்று உலக அல்சைமா தினத்தையொட்டி இந்த வாக்கத்தான் நிகழ்வானது நடைபெற்றது.
-சீனி, போத்தனூர்.
Comments