தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக கோவை கொடிசியா அரங்கில் வெட்டிங் டுடே கண்காட்சி!!

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக கோவை கொடிசியா அரங்கில் வெட்டிங் டுடே கண்காட்சி துவங்கியது. திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சியாக நடைபெறும் இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கான பிரத்யேக கண்காட்சியாக மூன்றாவது எடிசனாக வெட்டிங் டுடே எனும் பிரத்யேக கண்காட்சி கோவை கொடிசியா இ ஹாலில் துவங்கியது.

செப்டம்பர் 30 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதில் ரிக்ஸான், விஸ்வநாதன், அரோமா பொன்னுசாமி, அனிருதன் கிராந்தி, விஜயகுமார், சத்யா, வினோத் கோபால், பழனிசாமி, ராஜூ பல்ராம் பாபு, சஞ்சீவ் கபூர், ராஜ் மெலோடிஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கண்காட்சியில் நகைகள், புத்தாடைகள், இசைக் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், வெட்டிங் ப்ளேனர்ஸ், டெக்கரேட்டர்ஸ், திருமண நிகழ்விற்கு பயன்படும் ஹெலிகாப்டர், லக்சரி கார்கள் தரும் நிறுவனங்கள், ஆடல் & பாடல் கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் போன்ற திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கண்காட்சி தலைவர் சாஃப்ட் ஈவெண்ட் செந்தில் மற்றும் துணை தலைவர் ராஜன் ஆகியோர் கூறுகையில்: திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள, அலங்காரம் செய்வோர், ஆடை வாடிவமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள் போட்டோர்கிராபர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள, கண்காட்சி என தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments