வேம்பார் சாலையில் மக்கள் இயக்கம் மூலமாக நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை விளாத்திகுளம் எம்எல்ஏ பார்வையிட்டார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் மரங்கள் மக்கள் இயக்கம் மூலமாக நடப்பட்டுள்ள மரக்கன்றுகளின் வளர்ச்சியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் பகுதியானது கருவேலம் மரங்கள் நிறைந்த பகுதியாகும் எப்படியாவது பசுமையான தொகுதியாக மாற்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளுடன் மரக்கன்றுகளை நடுவது சட்டமன்ற உறுப்பினர் சார்பாக ஒரு கோடி மரக்கன்று நடுவது என பல்வேறு திட்டங்களை தொகுதியில் செய்து வருகிறார்கள். 

இந்த நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன்  விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments