கோவில்பட்டியில் பாஜக அரசு கண்டித்து தொடர் மறியல் போராட்டம்!!

மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்கிய பாஜக ஆட்சியை விட்டு வெளியேறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று கோவில்பட்டியில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:

விஷம்போல் ஏறி வரும் அனைத்து பொருட்களின் விளைவு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2014 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 410 இப்போது 1240 வங்கி மூலம் மானியம் என்று ஏமாற்றாதே மாணவர்கள்  உடனே  கல்வி கடன் வழங்கு அரசு அலுவலகங்களில் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்பு அரசு மருத்துவமனையில் மருத்துவர் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மற்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி தங்க தடை இன்றி உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிட வேண்டும். தந்தை பெரியார் நகர் மந்திதோப்பு மக்களுக்கு வீட்டுமனை ரசீது உடனே வழங்கிடு வேண்டும் சிறு குரு தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு,நகர செயலாளர்  சரோஜா மற்றும் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் பஸ் மறியல் நடைபெற்றது. சேதுராமலிங்கம்,பரமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தோழர் முனியசாமி, குருசாமி, லெனின், அலாவுதீன், ரெங்கநாதன், ஜோசப்,  ரஞ்சனி கண்ணம்மா, சுரேஷ், தோழர் செந்தில் ஆறுமுகம், விஜயலட்சுமி,  வஜ்ரேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். மறியலில் 215 பெண்கள் உட்பட 285 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments