உமரிக்காடு ஊராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் தண்ணீர் லாரியில் சப்ளை.!

 

-MMH

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைப்பொழிவு சீராக இல்லை  பெரும்பாலான ஊராட்சியில் கடும் தண்ணீர் கட்டுப்பாடு சில இடங்களில்  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கிடும் வகையில் உமரிக்காடு ஊராட்சி பகுதியான உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொது மக்களுக்கும் முக்கிய சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் அனைத்து வீடுகளை சார்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் .எஸ். ராஜேஷ்குமார் அவர்களின் சொந்த நிதியில் வழங்கினார் இந்நிகழ்வில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன், ஆலடியூர் ஊர் தலைவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சேகர்,மற்றும் ஒன்பது வார்டுகளை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சொந்த நிதியில் ஊராட்சி மன்ற தலைவர் நேரடியாக வந்து குடிநீரை வீடு வீடாக, தெருத்தெருவாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கியதை அனைத்து பொதுமக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments