தூத்துக்குடி மருத்துவமணையில் அமமுக MLA உடன் தமிழர் விடியல் கட்சி சந்திப்பு !!!

-MMH

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் காற்றாலை மின்சாரம் நிறுவுவதற்கு, விளைநிலங்களையும், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணிருக்காகவும், கால்நடைகள் குடிதண்ணிருக்காகவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் இருக்கின்ற பெரியகுளம் என்ற குளத்தை மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்பு செய்து வரும் தனியார் காற்றாலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சுந்தர்ராஜ் அவர்கள் தாக்கப்பட்டார். 

இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்திய தனியார் காற்றாலை கும்பல்களுக்கும், தனியார் காற்றாலை கும்பல்களுக்கு துணை போகும் அதிகார வர்க்கத்திற்கும் நாங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 தாக்குதலில் காயம் பட்ட அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும்  சுந்தர்ராஜ் முன்னாள் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களை  இன்று 05.09. 2023 செவ்வாய்க்கிழமை  காலை 11.30  மணி அளவில் சந்தித்து ஆறுதல் கூறினோம். தொடர்ந்து அவர்கள் டிசார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு எதிராக எடுக்கின்ற அனைத்து மக்கள் நல போராட்டங்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று உறுதிமொழி கொடுத்தோம்.

 இந்த நிகழ்வில், மனிதநேய மக்கள் கட்சி Ex மாவட்ட செயலாளர் அசன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ் கத்தார் பாலு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத் மற்றும் நான் கலந்து கொண்டோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments