வல்லநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!!!

 


பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வல்லநாட்டில் அமைந்துள்ள அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 



இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில்குமார் என்ற பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட நிர்வாகிகள் ஆன்மீகப்பிரிவு மாவட்டச் செயலாளர் பரமசிவம், முருகன், தம்பான், பேச்சி, வசந்த், சீனிவாசன், ஒன்றிய நிர்வாகிகள், மணிகண்டன், சுந்தர்ராஜ் ,தம்பான், மலையாண்டி ,சாந்தி, சுடலைகண்ணு, கிளைத் தலைவர்கள் கணேசன், பரமசிவன், மந்திரலட்சுமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், -முனியசாமி.

Comments