கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலக்ஸி 2023 கலை விழா நடைபெற்றது

 


கே.ஜி  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலக்ஸி 2023 கலை விழா  நடைபெற்றது

கோவை சரவணம்பட்டி சாலையில் உள்ள கே.ஜி  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேலக்ஸி 2023 எனும் கலை விழா  நடைபெற்றது. இவ்விழாவில் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நடனம், பேச்சுப்போட்டி , ஓவியம், சமையல் , தனிநபர் நடிப்பு, குறும்படம், புகைப்படம் போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் சார்லஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 

கல்லூரியின் முதல்வர் முனைவர் இரத்தினமாலா தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா அவர்கள் சிறப்புரையாற்றினார்.  அவ்வுரையில், கலை என்பது ஒரு தவம், அதில் மனம், உடல், ஆன்மா மூன்றும் ஒரு நேர்கோட்டில் இணையும்பொழுதுதான் முழுமை பெரும். மேலும்  தான் கற்றுக்கொண்டதைப்  பிறர்க்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசனையோடு தருபவன் கலைஞன் எனக் கூறினார்.  

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாளராகப்  பிரபல நடனக்கலைஞர் திரு. பாபி எரிக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்  பரிசுகளை வழங்கிச்  சிறப்புரையாற்றினார் .

அவ்வுரையில் மாணவர்கள்  சமுதாயத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் குறிப்பாகப் பெண்கள் தங்களை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் பேசினார் . மேலும் நம்பிக்கைக்கும் தெரிந்துகொள்வதற்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள்  உணர்ந்து கொள்ள  வேண்டும் எனக் கூறினார்.

மேலும் விழா மேடையில் மாணவர்களின் ஆடல், பாடல், இசை, ஆடை அலங்கார அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன. நிறைவாக கல்லூரியின் மாணவர் நலத் தலைவர் முனைவர் திரு. பூவலிங்கம் நன்றியுரையாற்றினார்.

-சீனி, போத்தனூர். 

 


Comments