5 இலட்சம் அரசு ஊழியர்களின் ஒட்டு யாருக்கு? தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேச்சு. !!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப் போன்ற 285 ஒன்றியங்களில் நடைபெறுகிறது, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் ஓட்டு கிடையாது என சங்க உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கிளையில் இன்று (13-10-2023)கிளர்ச்சிப் பிரச்சாரம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க வட்டார தலைவர் திருமதி புஷ்பவள்ளி தலைமையில் தோழர்கள் சோலையப்பன்,சேஷம்மாள் ,வி.செல்வம், க.வள்ளியம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவுப்பணினார் சங்க அமைப்புச் செயலாளர் ஓ.பலவேசம்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டசெயலாளர் செயலாளர் து.மாரியப்பன்,ஜேனட்ரத்னாபாய் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் பிரச்சாரவுரையாற்றினார். நிறைவாக வட்டார நிர்வாகி வே.ஆண்டிச்சாமி நன்றி கூறினார். அக்டோபர் 26 அன்று மாவட்டதலைநகரில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களைப் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.
Comments