பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் 63வது ஆண்டு விழா!!
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே பனையூரில் இந்து நாடார் நடுநிலைபள்ளியில் 63 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த ஆண்டு விழாவிற்கு கிராமத் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், காசிராஜன், சிவபெருமாள் தலைமை வகித்தனர், பள்ளிச் செயலாளர் ஆதி மாரீஸ்வரன், பொருளாளர் செல்வகுமார், முத்துவேல், காசி மாரியப்பன், பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மரிய அனிதா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் அற்புத சகாயராஜா தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மணிவேல், முத்துராஜா, மாரிச்சாமி, பெருமாள், பிச்சை குட்டி, உட்பட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.
Comments