கோவையில் ஆர்.எஸ். புரத்தில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை நடிகை ராதிகா சரத்குமார் துவக்கிவைத்தார்!!


கோயம்புத்தூர், அக்டோபர் 01, 2023 - கோவை ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையை பிரபல நடிகை திருமதி. ராதிகா சரத்குமார் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.

விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன் வரவேற்று பேசியதாவது :- கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர், திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், தொழில் அனுபவமிக்க பணியாளர்கள், அன்பும்,  கருணையுடனும், கடமையாற்றுவோம், என்ற 3 தாரக மந்திரங்களோடு செயல்படுவோம். கண் பிரச்னைக்கு உலகில் உள்ள தீர்வுகளை கேரளாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் முன்று மருத்துவ துறை நிபுணர்களின் நோக்கமாக டிரினிட்டி துவக்கப்பட்டது. இதன் இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மற்றும் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வலு சேர்த்துள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்காலத்தில் மனிதர்களுக்கு கண்நலக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் மொபைல் போன்களும், கணினியின் ஒளித்திரைகளின் அதீதப் பயன்பாடும் தான். பிஞ்சுக் குழந்தைகளின் கைகளிலும் மொபைல் டச்போன் உள்ளது இது ஆபத்தான போக்கு. எங்கள் கண்நல மருத்துவமனை சார்பில், கோவையில் 25 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்துக்குள் இருக்கும் முதியோர்களுக்கு, வீடுதேடிச் சென்று கண் சிகிச்சைகள் வழங்க இருக்கின்றோம். மாதந்தோறும் 14 வயதுக்குட்பட்ட, 500 பள்ளிச் சிறார்களுக்கு  இலவச கண்ணாடிகள் வழங்க இருக்கின்றோம். கிராமபுற பகுதிகளில் அடிக்கடி கண்பரிசோதனை முகாம்கள் நடத்தவுள்ளோம். விரைவில் கோவையில் கண் வங்கியை திறக்கவுள்ளோம். 

நீரிழிவு நோயாளிகள் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். டயபடிக் ரெடினோபதி எனும் விழித்திரை ரத்த நாள பாதிப்பு நோய், அறிகுறிகள் வெளித்தெரியாமலேயே முற்றிலும் பார்வை இழப்பு நேரிடும் இதை 'ஸ்டீலின் விஷன் 'என்பார்கள். எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலந்தாழ்த்தாது அதிவிரைவு சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் பிரதானமானதாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய்க் கோளாறு உள்ளவர்கள், ரத்தத்தில் குளுகோஸ் கட்டுப்பாடு இல்லாதவர்களின் விழித்திரை ரத்த நாளங்கள், குளுகோஸ் வண்டலால் சிதைவுறும். ஆக்ஸிஜனும் தடையாகும் என்பதால் முற்றிலும் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகும். மேற்படி ஆபத்து நேராமல் இருக்க, நீரிழிவு நோயாளிகள் பார்வை லேசாக மங்கினாலே கண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவேண்டும். 

தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவையில் இன்று அக்டோபர் 1-ம் தேதி ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) துவக்கப்பட்டுள்ளது. இங்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும், கண்களைச் சுற்றிலும் உள்ள சவால்களுக்கும்  உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த உயர்தர சிறப்பு தீர்வுகளை தரும் மருத்துவனை இது. 

முன்னேறி வரும் நாகரீக உலகில் புதிய பரவசமிக்க கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் கண்நோய் தீர்வுகளுக்கு பின்புலமாக விளங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால், கண்நோய்க்கான நிவாரணங்களையும், தீர்வுகளையும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்தது. தற்போது இயந்திரங்களும், லேசர்களும் தீர்வுகளுக்கான கருவிகளாக மனிதனின் கையில் உள்ளன. இதே தொழில்நுட்பங்கள், மனிதனின் கண்களை நேரடியாக பாதிக்கின்றன. தொடர்ந்து  வெளிச்சமான விளக்கு ஒளி, தொடர்ந்து திரைகளை பார்த்தல், சுற்றுச் சூழல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில், எப்போதும் மாறாத இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் திறம்பட செயல்படும் சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். எனவே, சிறப்பான பரிசோதனை, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள், சிறப்பான ஆலோசனைகளுடன் கண்களை பாதிக்கும் சவால்களுக்கு சரியான தீர்வுகளை அளிக்கிறோம்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள், அவற்றை பெறும் நோயாளிகள், தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இருதரப்பையும் அறிந்துள்ளோம். எனவே எங்களது தொடர்புகள் மனிதாபிமான மிக்கதாகவும், அன்பான அணுகுமுறை கொண்டதாகவும் இருக்கும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நோயாளிகளை மையப்படுத்தி அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களது கடமை. நோயாளிகளுக்கான வசதியையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம். விரைவின் கோவை மக்கள் டிரினிட்டி அனுபவத்தை பெறவுள்ளனர். டிரினிட்டி பல்வேறு தேசிய நிறுவனங்களுடனும், முன்னணி மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நகரில் முதியோருக்கான சேவையையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது:-  கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் டிரினிட்டி கண் மருத்துவமனை போன்ற மருத்துவமனை துவங்கிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல விஷயங்களை இணையதளம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திரைப்படங்களில் சிகரெட் பிடித்தல் காட்சிகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசு கூறும் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறது. கோவைக்கும் எனக்கும் எப்போதும் ஒரு நல்ல உறவு உள்ளது. சின்ன வயதில் என் தந்தையுடன் வந்த அனுபவம் உள்ளது. இங்குள்ள பலருடன் நெருங்கிய உறவு உள்ளது. அவர்களை போனில் தான் தொடர்பு கொள்ள முடிகிறது. அவர்களை இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கர்நாடகத்தில் நடிகர் சித்தார்த்க்கு நடந்த சம்பவம் குறித்து எனக்கு  தகவல் தெரியவில்லை. காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அமல் படுத்த வேண்டும். 
கோவையில் சினிமா துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சினிமா துறையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம்  தற்போது குறைவாக இல்லை.அந்த காலத்தில் தொடாமல் பேசினர். இப்போது காலத்திற்கு ஏற்ப அந்த நிலை மாறியுள்ளது. இப்போது வித்தியாசமான கதைகள் வருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. என் சந்திரமுகி- 2 தற்போது திரைக்கு வந்துள்ளது. அடுத்து துருவ நட்சத்திரம் திரைப்படம் வர உள்ளது. தவிர, சீரியல், வெப்சீரிஸ்கள் நிறைய செய்கிறேன். 

டிஜிட்டலுக்கு தரமான தயாரிப்பாளர்களை விரும்புகிறேன். அந்த பிளாட்பார்ம்-க்கு நானும், என் கணவரும் மீண்டும் கொண்டு வந்து உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு ரொம்ப வருடம் பேசப்பட்டது. தற்போது அமல் படுத்தப்பட்டது. அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் எடுக்காம். அம்மி கல் தள்ளி கொண்டே இருந்தால் தான் நகரும். அதுபோல நாமும் இந்த விஷயத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். தற்போது ஆன்லைன் விமர்சகர்கள் வந்துள்ளனர். அவர்களை தவிர்க்க முடியாது. அவர்கள் அதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களை நிறுத்த கூற முடியாது.‌நாம் தான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.     
                                                                                                
விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மேலும் விழாவில் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை, விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கே ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கேஜி பக்தவச்சலம், அன்னபூர்ணா நிறுவனங்களில் தலைவர் ராமசாமி, ஸ்ரீனிவாசன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், வேதநாயகம் மருத்துவமனை டாக்டர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் நாகசுப்பிரமணியன், சுந்தரவடிவேலு மற்றும் மகாவீர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் பால்சந் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments